ஈரோட்டில் ஆதித்யா அருண் பிரசாத் சதுரங்க போட்டி பரிசளிப்பு விழா..!

ஈரோட்டில் ஆதித்யா அருண் பிரசாத் சதுரங்க போட்டி பரிசளிப்பு விழா..!
X

சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிளின் புரவலர் அருண் பிரசாத் வழங்கினார்.

ஈரோட்டில் ஆதித்யா அருண் பிரசாத் சதுரங்க போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.

ஈரோட்டில் ஆதித்யா அருண் பிரசாத் சதுரங்க போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட சதுரங்க சார்பில், மாபெரும் ஈரோடு மாவட்ட அளவிலான ஆதித்ய அருண் பிரசாத் கோப்பைக்கான சதுரங்க போட்டி கொங்கு கல்வி நிலையத்தில் நடைபெற்றது. இப்போட்டியை கொங்கு கல்வி நிலையத்தின் தாளாளர் செல்வராஜ் துவக்கி வைத்தார். போட்டியில் 9 வயதிற்கு உட்பட்டவர்கள் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் 15 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் பொதுப் பிரவில் என நான்கு பிரிவில் கலந்து கொண்டனர்.


போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு 101 பரிசுக் கோப்பைகளும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் போட்டியின் பரிசளிப்பு விழாவில் ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிளின் புரவலர் அருண் பிரசாத் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழையும் பரிசுகளையும் வழங்கி கௌரவித்தார்.

இவ்விழாவில், ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் ஸ்ரீ ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில், ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் செயலர் ரமேஷ் நன்றியுரை கூறி போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!