அந்தியூர் - பர்கூர் சாலையில் ஏரி உபரிநீர் செல்ல பெட்டி பாலம்..!

அந்தியூர் - பர்கூர் சாலையில் ஏரி உபரிநீர் செல்ல பெட்டி பாலம்..!
X

உயர்மட்ட பெட்டி பாலம் அமைக்கும் பணியை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் - பர்கூர் சாலையில் ஏரி உபரிநீர் செல்ல ரூ.1.50 கோடியில் உயர்மட்ட பெட்டி பாலம் அமைக்கும் பணியை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

அந்தியூர் - பர்கூர் சாலையில் ஏரி உபரிநீர் செல்ல ரூ.1.50 கோடியில் உயர்மட்ட பெட்டி பாலம் அமைக்கும் பணியை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் மழைக்காலங்களில் பெய்கின்ற மழையினால் ஏற்படுகின்ற காற்றாற்று வெள்ளம் மூலம் கெட்டிசமுத்திரம் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறும் பகுதியில் உள்ள அந்தியூர் - பர்கூர் சாலையை பொமக்கள் கடந்து செல்ல அவதிப்பட்டனர்.

இதனால், அப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 3 மீட்டர் உயரம் 3 மீட்டர் அகலத்தில் இரண்டு கண்கள் உடைய பெட்டி பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த உயர்மட்ட பெட்டி பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை (இன்று) நடந்தது. இதில், அந்தியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் சதாசிவம், சாலை ஆய்வாளர் ரமேஷ் ரவிக்குமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் குருசாமி (சங்கராபாளையம்), சரவணன் (மைக்கேல்பாளையம்), மாறன் (கெட்டிசமுத்திரம்), அந்தியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் நாகராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business