/* */

புஞ்சைபுளியம்பட்டியில் ஆட்டோவில் ரேசன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது

புஞ்சைபுளியம்பட்டி அருகே மினி ஆட்டோவில் 750 கிலோ ரேசன் அரிசி கடத்தியதாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

புஞ்சைபுளியம்பட்டியில் ஆட்டோவில் ரேசன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது
X

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த காலிப்பாளையம் நால்ரோடு பகுதியில், இரவு மாவட்ட குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மினி ஆட்டோ ஒன்று வந்தது. அந்த மினி ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில், மினி ஆட்டோவில் 750 கிலோ ரேசன் அரிசி கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியை கடத்தியதாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி, நீர்பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 21), புளியம்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்த குமார் என்கிற சித்திரை குமார் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

விசாரணையில், அவர்கள் ஈரோட்டில் இருந்து ரேசன் அரிசியை கடத்தி சென்று, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெளிமாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 750 கிலோ ரேசன் அரிசி மற்றும் மினி ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 11 Oct 2021 4:15 PM GMT

Related News