பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் ரூ. 93 லட்சத்தில் தரைதளம் அமைக்கும் பணி துவக்கம்...

பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் ரூ. 93 லட்சத்தில் தரைதளம் அமைக்கும் பணி துவக்கம்...
X

பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் முத்துசாமி.

ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் தரைதளம் அமைக்கும் பணியினை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள சிமெண்ட் பூச்சு தரை மற்றும் பேவர் பிளாக் கல்தளம் ஆகியவற்றை அகற்றி விட்டு ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் கருங்கற்கள் கொண்டு சுமார் 23000 சதுர அடி பரப்பளவில் தரைதளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.


அதன்படி, ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள சிமெண்ட் பூச்சு தரை மற்றும் பேவர் பிளாக் கல்தளம் ஆகியவற்றை அகற்றி விட்டு ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் கருங்கற்கள் கொண்டு தரைதளம் அமைக்கும் பணியினை இன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். பணிகளை விரைவாக முடித்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

பின்னர், அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போது எதிர்க்கட்சியினர் நடத்தி வரும் சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வை ஆர்ப்பாட்டமானது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காமல் முதல்வரின் வளர்ச்சி திட்டப்பணிகள் மட்டுமே தேர்தலில் எதிரொலிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

பின்னர், கடந்த ஆட்சியில் வீட்டுவசதி வாரியத்தில் எவ்வளவு வீடுகள் காலியாக உள்ளன என்பதை கணக்கீடு செய்யாமல் கட்டப்பட்டதால் 8 ஆயிரம் வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. வீட்டு வசதி வாரியத்தின் 135 இடங்களில் கட்டப்பட்டுள்ள வாடகை வீடுகளில் 60 இடங்களில் 12 ஆயிரம் வீடுகள் சேதமடைந்ததுள்ளன.

இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே, அதனை இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்காக மாற்றி கட்ட வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். தற்போது, 60 இடத்தையும் ஆய்வு மேற்கொண்டு இடித்து கட்டுவதற்கு முதற்கட்டமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மேலும், வீட்டு வசதி வாரியத்தில் கட்டி மூடிக்கப்பட்டு விற்கப்பட்ட வீடுகளில் 11 இடங்களில் 10 ஆயிரம் சேதமடைந்த வீடுகளை வீட்டு வசதி வாரியத்தின் மூலம் விரைவில் கட்டுவதற்காக பணிகள் துவக்க இருக்கிறது. அதற்கான சட்ட திருத்தம் தேவைப்படுவதால் சட்டமன்றத்தில் முன்வைக்கப்படுவதாகவும், குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் சுவாமிநாதன், அன்னக்கொடி, உதவி செயற்பொறியாளர் காணீஸ்வரி, மாவட்ட அறங்காவலர் குழுதலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், பவானி நகர திமுக செயலாளர் நாகராஜன், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரிதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!