/* */

காலிங்கராயன்பாளையத்தில் புகையிலை, இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்..!

சித்தோடு அருகே உள்ள காலிங்கராயன்பாளையத்தில் புகையிலை மற்றும் இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

காலிங்கராயன்பாளையத்தில் புகையிலை, இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்..!
X

100 நாள் வேலை திட்டப் பணியாளர்களுக்கு புகையிலை மற்றும் இளம் வயது திருமண எதிர்ப்பு குறித்து ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலக மாவட்ட நலக் கல்வியாளர் சிவகுமார் எடுத்துரைத்தார்.

சித்தோடு அருகே உள்ள காலிங்கராயன்பாளையத்தில் புகையிலை மற்றும் இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் காலிங்கராயன்பாளையம் பகுதியில் 100 நாள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கு புகையிலை மற்றும் இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு, ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலக மாவட்ட நலக் கல்வியாளர் சிவகுமார் தலைமை வகித்தார். முகாமில் புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீமைகள், உடல்நல பாதிப்புகள், இளம் வயதினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, பெண்களுக்கு இளம் வயது திருமணத்தால் ஏற்படும் வாழ்க்கை பிரச்சனைகள் மற்றும் உடல் நல பாதிப்புகள், சமூக தாழ்வு நிலைகள், இளம் வயது கர்ப்பத்தால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் உடல் நல பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட நோக்கம் மற்றும் பயன்பாடுகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான பரிசோதனையின் அவசியம், சமுதாய புற்றுநோய் கண்டறியும் திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்யப்பட வேண்டிய வயதினர்கள் அதன் அவசியம், புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள், வளர் இளம் பருவத்தினருக்கான ஊட்டச்சத்து உணவு முறைகள், மனநல ஆலோசனை மற்றும் போதை பழக்க மீட்பு ஆலோசனை குறித்து விளக்கமாக சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட புகையிலை தடுப்புப் பிரிவு சமூக சேவகர் சங்கீதா, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மனநல பிரிவு சமூக சேவகர் கவிதா மற்றும் 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்கள் 65 பேர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Jan 2024 7:00 AM GMT

Related News