ஈரோடு அருகே வாசவி கல்லூரி நிகழ்ச்சியில் ஆற்றல் அசோக்குமார் பங்கேற்பு..!
மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி ஆற்றல் அசோக்குமார் பாராட்டினார்.
ஈரோடு அருகே சித்தோட்டில் உள்ள வாசவி கல்லூரியில் வேலைவாய்ப்புத் துறை சார்பில், நடைபெற்ற திறன் மேம்பாட்டு கருத்தரங்கில் ஆற்றல் அசோக்குமார் பங்கேற்றார்.
ஈரோடு வாசவி கல்லூரியில் வேலைவாய்ப்பு துறை சார்பில், நடைபெற்ற திறன் மேம்பாட்டு கருத்தரங்கில் ஆற்றல் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஆற்றல் அசோக்குமார் பங்கேற்று, கல்லூரியில் கல்வி மற்றும் விளையாட்டு துறையில் சாதனை புரிந்த 205 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் சிவக்குமார், செயலாளர் சதாசிவம் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஆற்றல் அசோக்குமார் பேசியதாவது, மாணவ மாணவிகளுக்கு கல்லூரி காலம் என்பது வாழ்க்கையில் உயர்வான இடத்திற்கு செல்வதற்கான தொடக்க காலம். இதில், திறமைகளை வளர்த்துக் கொண்டு வீட்டிற்கும் சமுதாயத்திற்கும் சிறந்த பங்காற்ற வேண்டும். நவீன தொழில்நுட்ப சாதனங்களால் எண்ணங்களையும் சிந்தனைகளையும், சிதறவிடாமல் சிறந்த மாணவராய் தேர்ச்சி பெற்றால் சிறந்த தொழில் நிறுவனங்களில் உயர் பொறுப்பில் பணியாற்றலாம்.
அரசு பள்ளி மற்றும் கல்லூரியில், பயின்ற நான் இன்று ஆற்றல் அறக்கட்டளை என்ற அமைப்பை உருவாக்கி பொதுமக்கள் பலருக்கு உதவி செய்யும் உயர்வான இடத்திற்கு வந்துள்ளேன். அறக்கட்டளையின் மூலம் பயன்பெறும் மக்கள் மனதில் ஏற்படும் சந்தோஷம் மகிழ்ச்சி இன்னும் சமுதாயத்திற்கு தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை மேம்படுத்துகிறது. அதேபோல், மாணவச் செல்வங்கள் சமுதாயத்தில் உயர்வான இடத்தை நீங்கள் பெற ஆற்றல் அறக்கட்டளை வாழ்த்துகிறது என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu