பூதப்பாடியில் புகையிலை எதிர்ப்பு, கோடை கால நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

பூதப்பாடியில் புகையிலை எதிர்ப்பு, கோடை கால நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
X

100 நாள் வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கு புகையிலை எதிர்ப்பு மற்றும் கோடைக் கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவக்குமார் எடுத்துரைத்தார்.

பவானி அருகே உள்ள பூதப்பாடியில் புகையிலை எதிர்ப்பு மற்றும் கோடைக் கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை இன்று நடைபெற்றது.

பவானி அருகே உள்ள பூதப்பாடியில் புகையிலை எதிர்ப்பு மற்றும் கோடைக் கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வட்டாரம் குருவரெட்டியூர் ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட பூதப்பாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கு புகையிலை எதிர்ப்பு மற்றும் கோடைக் கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீமைகள், உடல்நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு மற்றும் ஒழிப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம், கோடை வெப்ப தாக்கத்தினால் ஏற்படும் உடல் பாதிப்புகள் மற்றும் நோய்கள், கோடை வெப்ப தாக்கம் ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை முறைகள், கோடை வெப்ப தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் உணவு வழிமுறைகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி அளிக்கப்பட்டது.

இம்முகாமில் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவக்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பிரகாசம், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் ஐசக் மற்றும் 100 நாள் வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் 50 பேர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!