கணக்கம்பாளையம் ஊராட்சியில் புகையிலை எதிர்ப்பு, புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

கணக்கம்பாளையம் ஊராட்சியில் புகையிலை எதிர்ப்பு, புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
X

ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலக மாவட்ட நலக் கல்வியாளர் சிவகுமார் மாணவிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

கணக்கம்பாளையம் ஊராட்சியில் நாட்டு நலப்பணி திட்ட முகாமில் புகையிலை எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை (இன்று) நடந்தது.

கணக்கம்பாளையம் ஊராட்சியில் நாட்டு நலப்பணி திட்ட முகாமில் புகையிலை எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை (இன்று) நடந்தது.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வட்டாரம் கள்ளிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சியில் கோபி பிகேஆர் மகளிர் கலைக் கல்லூரி சார்பில் நடைபெற்ற நாட்டு நலப்பணி திட்ட முகாமில் மாணவியர்களுக்கு புகையிலை எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த விழிப்புணர்வு முகாமில் புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல்நல பாதிப்புகள், இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை சமுதாய புற்றுநோய் கண்டறியும் திட்ட நோக்கம் மற்றும் பயன்கள், புற்று நோய்க்கான காரணிகள், வகைகள் மற்றும் பரிசோதனை கிடைக்கும் இடங்கள், புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியவர்கள் அதன் அவசியம், டெங்கு காய்ச்சல் பரவும் விதம் ,கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு உடனடி சிகிச்சை மற்றும் பரிசோதனையின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், மழைக்கால நோய்களிலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள், தொழு நோயின் ஆரம்ப நிலை அறிகுறிகள், ஆரம்ப நிலை சிகிச்சையின் அவசியம். இலவச தொழு நோய்க்கான சிகிச்சை கிடைக்கும் இடங்கள், தொழுநோய் ஒழிப்பில் சமுதாயத்தினரின் பங்கு, மக்களைத் தேடி மருத்துவம் திட்ட நோக்கம் மற்றும் பயன்பாடுகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சையின் அவசியம், சமச்சீர் உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சி முறைகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.


இந்நிழ்ச்சியில், ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலக மாவட்ட நலக் கல்வியாளர் சிவகுமார், மாவட்ட புகையிலை தடுப்பு அலுவலர் கலைச்செல்வி, சமூக சேவகர் சங்கீதா, மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ராஜசேகர், சுகாதார ஆய்வாளர் சிவகுமார், அலுவலர்கள், ஊராட்சித் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, நாட்டு நலப்பணி திட்ட மாணவியர்களுக்கு சுகாதார துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் நடமாடும் மருத்துவ குழுவினரால் மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

Tags

Next Story