விபத்தில் கால் முறிவு ஏற்பட்டவர் வீல்சேரில் வந்து வாக்கு செலுத்தினார்

விபத்தில் கால் முறிவு ஏற்பட்டவர் வீல்சேரில் வந்து வாக்கு செலுத்தினார்
X

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் வீல் சேரில் வந்து வாக்கு செலுத்திய வாக்காளர்

அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டில் விபத்தில் கால் முறிவு ஏற்பட்டவர் வீல்சேரில் வந்து வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்

ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டில் நடைபெற்று வரும் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் ஆண், பெண் வாக்காளர்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு பெருமாபாளையம் காலனி பகுதியை சேர்ந்த ஆரான் (60) என்பவருக்கு கடந்த 25 தினங்களுக்கு முன்பு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


இன்று நடைபெற்ற தேர்தலில் வாக்கு பதிவு செலுத்த அத்தாணி எல்.செம்புளிச்சாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு வீல்சேரில் வந்து தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.

Tags

Next Story