அத்தாணியில் மரக்கன்று வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்

அத்தாணியில் மரக்கன்று வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்
X

அத்தாணி பேரூராட்சியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில், பல்வேறு வகையான மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.

அந்தியூர் அடுத்துள்ள அத்தாணி பேரூராட்சி பகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

ஈரோடு வடக்கு மாவட்டத்தில் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பேரூராட்சி உள்ளது. இங்கு, நாம் தமிழர் கட்சி சார்பில், பல்வேறு வகையான மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் அப்புச்சாமி தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில், அத்தாணி பேருந்து நிறுத்தம், அந்தியூர் சாலை மற்றும் பேரூராட்சி வார்டுகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்த துண்டறிக்கை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது, மாவட்ட பொருளாளர் முருகேசன், அந்தியூர் தொகுதி தலைவர் சிவக்குமார், ரூபன்குமார், ஜனார்த்தனன், கார்த்திக்குமார், சக்திவேல், பவானி தொகுதி செயலாளர் மாரிமுத்து, வசந்த், மகளிர் பாசறையை சேர்ந்த சத்யா, கேத்தரின், மாதவி, மீனாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு, துண்டறிக்கை வழங்கினர்.

Tags

Next Story
ai marketing future