அத்தாணி உள்வட்டத்திற்கு உட்பட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம்

அத்தாணி உள்வட்டத்திற்கு உட்பட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம்
X

அத்தாணி பேரூராட்சி சமுதாயக்கூடத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது

அத்தாணி உள்வட்டத்திற்கு உட்பட்ட சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமில் 55 மனுக்கள் பெறப்பட்டன

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட அத்தாணி உள்வட்ட கிராமங்களுக்கு அத்தாணி பேரூராட்சி சமுதாயக்கூடத்தில் இன்று சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

அந்தியூர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி , துணை வட்டாட்சியர் (தேர்தல்) ஜமுனாராணி, நில வருவாய் ஆய்வாளர் நந்தக்குமார், அத்தாணி பேரூராட்சி தலைவர் புனிதவள்ளி செந்தில் கணேஷ், அத்தாணி உள்வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில், முதியோர் உதவித்தொகை, ஆன்லைன் பட்டா மாற்றம், வாரிசு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட 55 மனுக்கள் பெறப்பட்டன.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!