மழை பாதிப்புகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு

மழை பாதிப்புகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
X

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு செய்த காட்சி.

ஈரோடு மாவட்டத்தில் மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் பிரபாகர் ஈரோடு மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதிக்குட்பட்ட செட்டிநொடி சாலையில் காரணமாக கனமழை மண்சரிவு ஏற்பட்டுள்ளதையடுத்து சாலையை சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து காளிங்கராயன் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வரட்டுப்பள்ளம் அணையினையையும் கண்காணிப்பு அலுவலர் பிரபாகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அணைகளின் நீர் கொள்ளளவு குறித்தும், நீர் வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்தும் அலுவலர்களிடமும் கேட்டறிந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!