சிட்டிங் வாலிபால் போட்டியில் ஹரியானா அணி வெற்றி

இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்துடன் இந்தியன் பாராலிம்பிக் கமிட்டி மற்றும் தமிழ்நாடு பாரா வாலிபால் அசோசியேஷன் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் 13-வது தேசிய சீனியர் சிட்டிங் வாலிபால் சாம்பியன்ஷிப்-2025 போட்டிகள் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனத்தின் உள்விளையாட்டு அரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றன, இப்போட்டியின் மகளிர் பிரிவு இறுதிச் சுற்றில் ஹரியானா அணியும் ஜார்க்கண்ட் அணியும் மோதிய கடுமையான போட்டியில் ஹரியானா அணி 25:22, 25:17 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தன்வசமாக்கியது, இப்போட்டியின் இறுதி நிலைப்படி ஜார்க்கண்ட் அணி இரண்டாம் இடத்தையும், கர்நாடகா அணி மூன்றாம் இடத்தையும், ராஜஸ்தான் அணி நான்காம் இடத்தையும் பிடித்தன, வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசுத் தொகையுடன் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டன, குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்தப் போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த திறமையான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வரும் சர்வதேச பாரா சிட்டிங் வாலிபால் போட்டிகளில் இந்திய தேசிய அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெறுவார்கள், இந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் முக்கிய அரங்கமாக அமைந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu