தாழ்த்தப்பட்ட ஏழை மாணவ, மாணவியருக்கு இலவச பி.எட். சேர்க்கை

தாழ்த்தப்பட்ட  ஏழை மாணவ, மாணவியருக்கு இலவச பி.எட். சேர்க்கை
X

அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம். 

அந்தியூர் தொகுதியில் தாழ்த்தப்பட்ட ஏழை மாணவ, மாணவியருக்கு இலவச பி.எட் படிப்பில் சேர எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் பி.எட். படிப்பில் சேர ஏழை தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் மதம் மாறிய கிறித்துவ மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே அரசு அளித்துள்ள கல்வி உதவித்தொகை சலுகையுடன் பல்கலைக்கழக கட்டணம், புத்தக கட்டணம், சீருடை கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டண சலுகையுடன் கல்வியியல் கல்லூரி (B.Ed) படிப்பு முற்றிலும் இலவசம். மேலும் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு பல்கலைக்கழக கட்டணம், புத்தக கட்டணம், சீருடை கட்டணம் ஆகியவை இலவசம். விருப்பமுள்ள மாணவ மாணவியர் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை 98652 99997 90437 99997தொடர்பு கொள்ளவும் என தெரிவித்தார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு