ஈரோடு: குருவரெட்டியூர் ஊராட்சி ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

ஈரோடு: குருவரெட்டியூர் ஊராட்சி ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
X

குருவரெட்டியூர் ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையில் திடீரென ஆய்வு செய்தார்.

குருவரெட்டியூரில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் பொருட்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அம்மாபேட்டை ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி பங்கேற்று திட்ட பணிகளை தொடங்கி வைத்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி இதற்கிடையில் குருவரெட்டியூர் ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையில் திடீரென ஆய்வு நடத்தினர்.

ஆய்வின் போது நியாயவிலைக் கடையில் உள்ள அரிசி, பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார்.மேலும் குடும்ப அட்டைதாரர்களிடம் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!