அந்தியூர் அருகே வீடு, காரை சேதப்படுத்திய காட்டு யானை

அந்தியூர் அருகே குடியிருப்பு பகுதிககுள் புகுந்த காட்டு யானை, வீடு மற்றும் காரை தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுததுள்ள பர்கூர் கொங்காடை மலை கிராமத்தை சேர்ந்தவர் ராமன். இவர் அப்பகுயில் உள்ள அங்கன்வாடி பள்ளி அருகே, தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவில் புகுந்த காட்டு யானை ஒன்று, ராமனின் வீட்டின் முன்புறம் உள்ள குடிசைகள், மரங்கள் மற்றும் கார் ஆகிவற்றை தாக்கி சேதப்படத்திவிட்டு சென்றது. இச்சம்பவத்தின் போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியறியதால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், சேதமடைந்த இடங்களை நேரில் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டர்.

வன விலங்குகள் அடிக்கடி காட்டை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளதாகவும், இதனை தடுக்க மின்வேலி , அகழி அமைப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!