அந்தியூரில் செல்போன் திருட்டு: ஒருவர் சிறையில் அடைப்பு

அந்தியூரில் செல்போன் திருட்டு: ஒருவர் சிறையில் அடைப்பு
X
செல்போன் திருடிய நபரை கைது செய்த அந்தியூர் போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம், விராலிகாட்டூரைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார், 41. இவர், நேற்று மாலை, பர்கூர் ரோட்டில் உள்ள தனது காம்ப்ளக்ஸ் முன்பு, இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் கவரில் மூன்று செல்போன்களை வைத்து விட்டு, காம்ப்ளக்ஸுக்கு உள்ளே சென்றார்.
இதைக் கண்காணித்து வந்த, அந்தியூர் மொடக்குறிச்சியானூர், வேடர் காலனியை சேர்ந்த செல்வராஜ் என்பவர், இருசக்கர வாகனத்தில் இருந்த மூன்று செல்போன்களையும் திருடிக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதைப்பார்த்த ரமேஷ் குமார் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், விரட்டிப் பிடித்து, செல்வராஜை பிடித்தனர். பின்னர், அந்தியூர் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். இதையடுத்து, செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அந்தியூர் போலீசார், பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!