அந்தியூர் வாரச்சந்தையில் வெற்றிலை ரூ.3.50 லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர் வாரச்சந்தையில் வெற்றிலை ரூ.3.50 லட்சத்துக்கு விற்பனை
X

கோப்பு படம்

அந்தியூர் வாரச்சந்தையில், மொத்தம் ரூ.3.50 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனையாகி உள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வாரச்சந்தையில் வெற்றிலை விற்பனை நேற்று நடைபெற்றது. இந்த சந்தைக்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், வேம்பத்தி, எண்ணமங்கலம், கோவிலூர், காட்டுப்பாளையம், சந்தியபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் வெற்றிலைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 100 வெற்றிலைகளை கொண்டது ஒரு கட்டு ஆகும்.

இதில், ராசி ரக வெற்றிலை கட்டு ஒன்று, குறைந்த பட்ச விலையாக ரூ.65-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.80 க்கும், பீடாவெற்றிலை குறைந்தபட்ச விலையாகரூ.50-க்கும். அதிகபட்ச விலையாக ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது. செங்காம்பு வெற்றிலை கட்டு ஒன்று ரூ.5-க்கு விற்கப்பட்டது. வெற்றிலை, மொத்தம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை ஆயின.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!