அந்தியூர் பேரூராட்சியில் வீடுவீடாக சென்று தடுப்பூசி: எம்எல்ஏ ஆய்வு

அந்தியூர் பேரூராட்சியில் வீடுவீடாக சென்று தடுப்பூசி:  எம்எல்ஏ ஆய்வு
X

அந்தியூர் பேரூராட்சிப் பகுதியில்,  வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அந்தியூர் பேரூராட்சி பகுதிகளில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இப்பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி காளிதாஸ் காலனி பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சின்னதம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாராத நிலைய தலைமை மருத்துவர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

இப்பணிகளை, அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம் நேரில் பார்வையிட்டார். அனைவரும் தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என, அவர் கேட்டுக்கொண்டார். அந்தியூர் வட்டாட்சியர் விஜயகுமார், கிராம நிர்வாக அலுவலர் யசோதாதேவி, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் எம்.பாண்டியம்மாள், அந்தியூர் ஒன்றிய நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!