பழங்குடியினர் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கிய அந்தியூர் எம்எல்ஏ
பழங்குடியினர் மக்கள் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினார்.
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி கிராமங்களில் வசிக்கும் 20 பழங்குடியின மக்கள் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பர்கூர் மலைக்கிராம பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்திடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்றார்.
அதனடிப்படையில் பழங்குடியின மக்களின் நலன்கருதி உடனடியாக புதிய வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, சோழகனை, தாமரைக்கரை, மொட்டைபோடு , குட்டையூர், பெஜலட்டி , மடம் உள்ளிட்ட மலைக்கிராம பகுதிகளில் வசிக்கும் 20 பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பங்கேற்று, 20 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு தலா ரூ.4.95 லட்சத்திற்கான ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் வெள்ளிங்கிரி, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu