பவானியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசியினர் ஆர்ப்பாட்டம்

பவானியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசியினர் ஆர்ப்பாட்டம்
X

பவானி நகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பவானி நகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியுசி தொழிற்சங்கம், உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளாட்சி தொழிலாளர் குறைதீர் ஆணையம் அமைக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி உள்ளாட்சி நிறுவனங்களின் அவுட்சோர்சிங் தினக்கூலி சுய உதவி குழு போன்ற முறைகளை ரத்துசெய்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மூன்று வருடங்கள் பணி முடித்து உள்ள ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

உள்ளாட்சி தொழிலாளர்களின் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யும் பிஎஃப்., இஎஸ்ஐ இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு மாதம் மாதம் காலம் தாழ்த்தாமல் செலுத்த வேண்டும். உள்ளாட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். மக்கள் தொகை பெருக்கம் கழிவுகள் அதிகரிப்பதற்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story