சத்தி அருகே கடம்பூரில் யானை துரத்தியதில் தொழிலாளி படுகாயம்

சத்தி அருகே கடம்பூரில் யானை துரத்தியதில் தொழிலாளி படுகாயம்

காட்டு யானை துரத்தியதில் படுகாயமடைந்த பெருமாள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே காட்டு யானை துரத்தியதில் தொழிலாளி படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Erode News - சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே காட்டு யானை துரத்தியதில் தொழிலாளி படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி இருட்டிப்பாளையம் பகுதி கரளியத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 40). தொழிலாளி. இவர், கடம்பூரிலிருந்து கரளையம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, இருட்டிப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த பெருமாளை துரத்தியது. இதனால், யானையிடம் இருந்து தப்பிக்க பெருமாள் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றார். அப்போது, யானை தும்பிக்கையால் தள்ளி விட்டதில், சிறிது தூரம் சென்றதும் அவர் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில், பெருமாள் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த, அந்த வழியாக சென்றவர்கள் பெருமாளை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பின்னர், அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Tags

Next Story