அத்தாணி அருகே அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து: தாய், மகன் உயிரிழப்பு
விபத்துக்குள்ளான அரசு பேருந்தையும், விபத்தில் உயிரிழந்த பூமேஸ்வரன், கந்தாயாள் ஆகியோரை படத்தில் காணலாம்.
அத்தாணி அருகே சாலையோர புகையால் அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தலை துண்டாகி தாய் உட்பட மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி சவுண்டப்பூர் பகுதியை சேர்ந்தவர் கந்தாயாள் (வயது 59). இவரது மகன் பூமேஸ்வரன் (வயது 29). இவர்கள் இருவரும் சொந்த வேலை காரணமாக அத்தாணி செம்புளிச்சாம்பாளையம் பகுதிக்கு சென்று விட்டு சவுண்டபூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் இன்று (நவ.11) காலை சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது, செம்புளிச்சாம்பாளையம் மயானம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலை ஓரம் கொட்டப்பட்ட குப்பைகளுக்கு மர்ம நபர்கள் யாரோ தீ வைத்து எரியூட்டி உள்ளனர். அதில், எழுந்த கரும்புகை காரணமாக சாலை புகைமூட்டமாக இருந்த நிலையில், இருசக்கர வாகனம் எதிர்திசையில் வந்த பி6ஏ என்ற அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.
அதிகமா கோபப்படுறீங்களா... அச்சச்சோ அது ரொம்ப ஆபத்துங்க..! இத படிங்க..!
இந்த விபத்தில் பூமேஸ்வரன் உடல் நசுங்கியும், அவரது தாய் கந்தாயாள் கழுத்து அறுபட்டு தலை துண்டாகி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆப்பக்கூடல் போலீசார் உயிரிழந்த தாய் மற்றும் மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோர புகையால் அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தலை துண்டாகி தாய் உட்பட மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu