ஈரோடு ரயில் நிலையத்தில் தீ பிடித்து எரிந்த கார்!

ஈரோடு ரயில் நிலையத்தில் தீ பிடித்து எரிந்த கார்!
X

ஈரோடு ரயில் நிலையத்தில் கார் தீப்பற்றி எரிந்தது.

ஈரோடு ரயில் நிலையத்தில் கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு ரயில் நிலையத்தில் கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 35). இவர் ஈரோடு மாவட்டத்தில் பாத்திரக் கடை நடத்தி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டுக்கு வந்த உறவினர்களை ரயிலில் அனுப்பி வைப்பதற்காக வந்த இடத்தில்தான் சம்பவம் நடந்துள்ளது.

பாலாஜி, நேற்று அவரது உறவினர்களை திருச்சி மாநகருக்கு ரயில் மூலம் அனுப்பி வைப்பதற்காக தனது காரில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். ரயில் நிலையத்தை அடைந்ததும் காரை பார்க்கிங் செய்துவிட்டு, பின்னர், காரில் இருந்து இறங்கி உறவினர்களை ரயில் நிலையத்திற்குள் அனுப்பி அனுப்பி வைத்துள்ளார். இவரும் அவர்களுடனேயே சென்று அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு திரும்பியுள்ளார்.

கார் பார்க் செய்துள்ள இடத்துக்கு வந்து, காரை திரும்ப எடுக்க நினைத்த அவர், அங்கு தனது காரில் புகை வரத் தொடங்கியதைக் கவனித்திருக்கிறார்.

அப்போது, காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகையுடன். தீ பிடித்து குபுகுபுவென எரிய துவங்கியது. உடனே பதற்றப்பட்ட அவர், அருகிலுள்ளவர்களின் உதவியை நாட, அவர்களில் ஒருவர் சொன்ன தகவலின் அடிப்படையில் தீயணைப்புத்துறைக்கு உதவி கோரி அழை்பு செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு தீயணைப்புதுறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் இருந்து வந்த தீயை அணைத்தனர். ஆனாலும் பெரும்பாலும் கார் தீபற்றி எறிந்து சேதமாகிவிட்டது.

இதில், காரின் முன்புற பகுதி தீயில் எரிந்து பெரும்பகுதி சேதமானது. இந்த தீவிபத்து காரின் பேட்டரியில் ஏற்பட்ட கசிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்