ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் 60 குண்டுகள் முழங்க காவலர் நினைவு அஞ்சலி
உயிர் நீத்த காவலர்களுக்கு ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்
உயிர் நீத்த காவலர்களுக்கு ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சனிக்கிழமை (இன்று) நினைவு அஞ்சலி செலுத்தினர்.
அக்டோபர் 21ம் நாள், ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. 1959ம் ஆண்டு, இதே நாளில் லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன இராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில், 10 மத்திய பாதுகாப்பு படைக் (சிஆர்பிஎப்) காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து, பதினாறாயிரம் அடி உயரத்தில், அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நாம் இன்று நினைவு கூர்கிறோம்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 12 மாதத்தில் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில், பல்வேறு சம்பவங்களில் வீரமரணம் அடைந்த 187 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சனிக்கிழமை (அக்.,21) இன்று காலை 8 மணிக்கு ஈரோடு மாவட்டத்தில், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நினைவு நாள் நிகழ்ச்சி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ஜவகர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு பிரிவு, உதவி காவல் கண்காணிப்பாளர், சத்தி உட்கோட்டம், காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஈரோடு நகரம், மற்றும் கோபி, ஆய்வாளர்கள் ஆயுதப்படை மற்றும் பெருந்துறை போக்குவரத்து காவல் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், காவல்துறை சார்பில் 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu