ஈரோட்டில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

ஈரோட்டில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட 3 பேரை படத்தில் காணலாம்.

ஈரோட்டில் காரில் கஞ்சா கடத்தி விற்பனை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்து, அவா்களிடம் இருந்து 4.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ஈரோட்டில் காரில் கஞ்சா கடத்தி விற்பனை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்து, அவா்களிடம் இருந்து 4.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய பகுதியில் கஞ்சா கடத்தல் நடப்பதாக ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

அந்த காரில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காரில் இருந்த 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஈரோடு மாணிக்கம்பாளையம் வக்கீல் தோட்டத்தை சேர்ந்த ரவியின் மகன் சக்திவேல் (வயது 29), முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரிய முதல் பகுதியை சேர்ந்த அசோக்குமார் (வயது 34) ஆகியோர் என்பதும், அவர்கள் ஈரோடு சென்னிமலை ரோடு ரங்கம்பாளையம் ஸ்ரீ நகரை சேர்ந்த ஹரி பிரசாத் (வயது 31) என்பவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்ததும் தெரியவந்தது.

இதன்பேரில், மதுவிலக்கு போலீசார், ரங்கம்பாளையத்துக்கு விரைந்து சென்று ஹரிபிரசாத்தை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்கு அருகில் முட்புதரில் 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சக்திவேல், அசோக்குமார், ஹரிபிரசாத் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். மேலும், இவர்களிடமிருந்து, 4 ஆயிரத்து 200 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறி முதல் செய்தனர்.

Tags

Next Story