அந்தியூரில் தீபாவளி வசூலில் ஈடுபட்ட 2 போலீசார் பணியிடை நீக்கம்

அந்தியூரில் தீபாவளி வசூலில் ஈடுபட்ட 2 போலீசார் பணியிடை நீக்கம்
X
தீபாவளி வசூலில் ஈடுபட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வெங்கடேஷ், பூமாலை.
அந்தியூரில் தீபாவளி வசூலில் ஈடுபட்ட இரண்டு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

2 policemen involved in Diwali collection in Andhiyur dismissed | அந்தியூரில் தீபாவளி வசூலில் ஈடுபட்ட இரண்டு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த வெங்கடேஷ் மற்றும் பூயாலை ஆகிய இரண்டு காவலர்களும் தீபாவளியையொட்டி அந்தியூரில் செயல்படும் உணவகம் ஒன்றில் வசூலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. புகாரையடுத்து இரண்டு காவலர்களையும் பவானி காவல் நிலையத்திற்கு பணியிடம் மாற்றம் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து, பணி இடமாற்றம் செய்யப்பட்ட 2 போலீசாரிடம் காவல் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளின் விசாரணையில், இரண்டு காவலர்களும் தீபாவளி வசூலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பூமாலை மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு