வால்பாறை: காட்டுமாட்டிற்கு உடல்நல பாதிப்பு - வனத்துறை தீவிர சிகிச்சை

வால்பாறை: காட்டுமாட்டிற்கு உடல்நல பாதிப்பு - வனத்துறை தீவிர சிகிச்சை
X

வால்பாறையில், உடல் நலம் பாதித்த காட்டுமாட்டிற்கு சிகிச்சை அளித்த வனத்துறையினர்.

கோவை வால்பாறை பகுதியில், எழுந்து நடக்க முடியாமல் இருந்த காட்டு மாட்டிற்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வால்பாறை வனச்சரகம் ஸ்டான்மோர் எஸ்டேட் சவரங்காடு பகுதியில், 6 வயது மதிக்கதக்க ஆண் காட்டுமாடு ஒன்று எழுந்து நடக்க முடியாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கால்நடை மருத்துவரை அழைத்துச்சென்று காட்டு மாட்டிற்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து காட்டு மாட்டிற்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். காட்டுமாட்டினை, மனித - வன உயிரின மோதல் தடுப்புக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர். காட்டு மாட்டிற்கு உடல் நலக்குறைவிற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது