கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ; சுற்றுலா பயணிகளை அவசர அவசரமாக வெளியேற்றம்
Coimbatore News- கவியருவி தற்காலிகமாக மூடல்
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியார் அணை அமைந்துள்ளது. இதற்கு அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதியில் குரங்கு அருவி எனப்படும் கவியருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து செல்வது வழக்கம்.
குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதல் சுற்றுலா பயணிகள் ஆழியார் கவியருவிக்கு படையெடுத்தனர். வனத்துறை அதிகாரிகளும் வழக்கம்போல சுற்றுலா பயணிகளை அருவியில் குளிக்க அனுமதித்தனர்.
இந்நிலையில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வால்பாறை மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அதிக அளவில் நீர் அருவியிலிருந்து கொட்ட தொடங்கியதால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, குளித்துக் கொண்டிருந்தவர்களை அவசர அவசரமாக வெளியேற்றினர்.
மேலும் அருவியில் நீர்வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் சென்று குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். வனத்துறையினர் ஆழியார் கவியருவியை தற்காலிகமாக மூடி உள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu