கோவை மாவட்டத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு

கோவை மாவட்டத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு
X

யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட  வனத்துறை முன்களப்பணியாளர்கள்

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய அளவில் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம், வால்பாறை. ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி, பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் நேரடியாக களத்தில் முன் களப்பணியாளர்கள்மூலம் கொண்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி 17ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டு 18 19 ஆம் தேதி வரை நடைபெற்றது.

முதல் நாளில் பிளாக் கவுண்ட் முறையில் சுற்றுகளில் 15 கிலோமீட்டர் நடந்து சென்று நேரடியாக தென்படும் யானைகள் கணக்கீடு செய்யப்பட்டது. 2 ம் நாளில் 2 கிலோமீட்டர் நேர்கோட்டுப் பாதையில் நடந்து யானைகளின் சாணம் மூலமாக மறைமுக கணக்கெடுப்பு பணி நடைபெற்றது

இதில், யானைகளின் கால்தடம் மற்றும் சாணம் மற்றும் நீர் நிலைகள் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில், அக்கா மலை ஆத்து கடைசி வனச்சரகம் நீர்நிலைகள் பகுதிக்கு வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமையில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இறுதி நாள் கணக்கெடுப்பில் வனவர் அய்யாசாமி மற்றும் வன பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய அளவில் நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....