ஆழியார் அணை நிரம்பியது :கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

ஆழியார் அணை நிரம்பியது :கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
X

ஆழியார் அணையில் மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீர்

அணையின் பாதுகாப்பு நலன் கருதி 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 1347 கன அடி உபரி நீர் ஆழியார் ஆற்றில் திறந்து விடப்பட்டது.

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை செய்து வருகிறது. குறிப்பாக வால்பாறை சுற்றுவடடர பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சோலையார், ஆழியார், பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்ததால், அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மழையின் அளவு குறைந்த போதிலும் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து வரும் தண்ணீர் ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் ஆழியார் அணையின் முழு கொள்ளளவான 120 அடியில் 119.50 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து இன்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1225 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையின் பாதுகாப்பு நலன் கருதி 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 1347 கன அடி உபரி நீர் ஆழியார் ஆற்றில் திறந்து விடப்பட்டது.

தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பாக பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் வகையில் அபாய ஒலி எழுப்பப்பட்டது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர், ஆழியார் ஆற்றில் கரைபுரண்டு ஓடி வருகிறது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!