சொத்து தகராறில் தந்தை கழுத்தை நெரித்துக் கொன்ற மகன் கைது

சொத்து தகராறில் தந்தை கழுத்தை நெரித்துக் கொன்ற மகன் கைது
X

கைது செய்யப்பட்டவர்

தொங்கு கயிற்றை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே செம்மாண்டம் பாளையம் பகுதியில் அனந்தபுரம் என்னும் ஊரில் சென்னிமலை (94) வசித்து வந்தார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னிமலை தனது இளைய மகனான ஆறுச்சாமி (53) உடன் வசித்து வருகிறார். சென்னிமலைக்கு சொந்தமாக 3 ஏக்கர் விவசாய நிலமும் மற்றும் வீடும் உள்ளது. இதை மகன்கள் மற்றும் மகளுக்கு பிரிப்பதில் சமீபத்தில் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னிமலை அனைவருக்கும் தான செட்டில்மெண்ட் செய்து வைத்துள்ளார். தனக்கு தனது தந்தை துரோகம் இழைத்து விட்டதாக எண்ணிய இளைய மகன் ஆறுச்சாமி படுத்த படுக்கையாக இருந்த தனது தந்தை சென்னிமலை படுக்கையில் இருந்து எழுந்தரிக்க பயன்படும் தொங்கு கயிற்றை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பிறகு ஒன்றும் நடக்காதது போல தனது சகோதரர்களுக்கு தந்தை இறப்பு பற்றி தகவல் தெரிவித்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த மூத்த மகன் ராமசாமி தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இது பற்றி பிரேத பரிசோதனை அறிக்கைக்காக ஆய்வாளர் சண்முகவேலு கோவை ஈஎஸ்ஐ அரசு மருத்துவமனைக்கு சென்னிமலையின் உடலை அனுப்பி வைத்தார். அதில் சென்னிமலையின் கழுத்தை நெரித்து கொன்றது தெரிய வந்தது. இதனை அடுத்து சந்தேகத்தின் பேரில் மூன்று சகோதரர்களையும் காவல் நிலையம் அழைத்து போலீசார் விசாரணை செய்தனர். இதில் இளைய மகன் ஆறுச்சாமி மற்றும் மூத்த மகன் வெள்ளையங்கிரி ஆகியவருக்கு நீதிமன்றத்தில் சொத்து தகராறு சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இளைய மகன் ஆறுச்சாமி தனது தந்தை தனக்கு மீண்டும் துரோகம் இழைத்து விடுவார் என்கிற எண்ணத்தில் சென்னிமலையின் படுக்கைக்கு பக்கத்தில் இருந்த தொங்கு கயிற்றில் கழுத்தை நெரித்துக் கொன்றதை விசாரணையில் ஒத்துக் கொள்கின்றார். இதனை எடுத்து ஆறு சாமியை கைது செய்த கருமத்தம்பட்டி போலீசார் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!