அதிமுக தேர்தல் அறிக்கை ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் - நத்தம் விஸ்வநாதன் உறுதி
Coimbatore News- செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் தொழில் சார்ந்த பிரதிநிதிகள் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன், ஜெயக்குமார், ஆர்.பி உதயகுமார், எஸ் பி வேலுமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் விவசாய பிரதிநிதிகள் தொழில் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டது
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நத்தம் விஸ்வநாதன், கோவையில் உள்ள தொழில் அமைப்பினர், விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவை அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். அதிமுகவின் தேர்தல் அறிக்கை என்பது அபூர்வமான தேர்தல் அறிக்கை. அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற அறிக்கையாக இந்த தேர்தல் அறிக்கை உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட சங்கத்தினர்கள் இடம் கேட்டு இந்த தேர்தலை அறிக்கையானது முழுமையாக வெளியிடப்பட உள்ளது.
திமுக தேர்தல் அறிக்கை மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒன்று கூட நிறைவேற்றவில்லை. எடப்பாடி பழனிசாமி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதிமுகவின் தேர்தல் அறிக்கையின் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதிமுக சார்பில் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கை ஆக்கப்பூர்வமானதாக இருக்கும். அதிமுகதேர்தல் அறிக்கையில் வரும் அனைத்தும் நிறைவேற்றப்படும் என மக்கள் நம்புகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றும்” என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu