மக்களின் எண்ண ஓட்டங்கள் தான் கருத்துக்கணிப்பாக வருகிறது - அமைச்சர் முத்துசாமி
அமைச்சர் முத்துசாமி
கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 4 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்கள் திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் வீட்டு வசதிவாரியத் துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு பயன்பாடுகள் கொண்டு செல்லப்படுகிறது. பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு உதவும் இயக்கம் திமுக. அதனால் நிறைய திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. நாளை மறுநாள் கோவையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளோம். கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வியூகம் என்பது ரகசியமாக இருக்க வேண்டும். தேர்தலில் வாக்குறுதி அளிக்க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நாளை திருப்பூர், கோவைக்கு வருகிறார்கள். ஒன்றிய அரசிடம் எதை எல்லாம் வாங்க வேண்டும் என கேட்டறிய உள்ளனர். நாங்கள் கருத்து திணிக்கவில்லை. மக்கள் எங்களுக்கு சாதகமாக உள்ளதை கருத்து கணிப்பு காட்டுகிறது. அந்த அளவு முதலமைச்சர் உழைக்கிறார். மக்களின் எண்ண ஓட்டத்தை கருத்து கணிப்புகளாக வெளியிடப்படுகிறது. அத்திக்கடவு அவிநாசி பணிகள் முடிவடைந்த பிறகும் சில பணிகள் நிறைவு பெறாமல் இருந்து வருகிறது. தாமதம் ஏற்பட காரணமே நிலம் எடுக்க விவசாயிகள் ஒப்புதல் அளிக்காததது தான். விவசாயிகளிடம் பேசிய நிலம் பெற்று திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அத்திக்கடவு அவினாசி திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu