அதிமுகவிற்கு திமுக, பாஜக இரண்டுமே பகையாளி தான்; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
Coimbatore News- கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார், ”பிஜேபிக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் பணியை ஓபிஎஸ் செய்து வருகிறார். தேர்தலுக்கு பிறகு ஓபிஎஸ் பிஜேபியில் இணைந்து விடுவார். பிஜேபியுடன் யார் வேண்டுமானாலும் கூட்டணி சேரலாம். அதிமுகவைப் பொறுத்தவரையில் பெரிய கூட்டணி, மகத்தான கூட்டணி அமையும்.
தமிழகத்தில் பிஜேபி இல்லாத கூட்டணி தான் அமையும். பிஜேபி தவிர்த்து யார் வேண்டுமானாலும் கூட்டணியில் இணையலாம். அதிமுக யாரையும் கெஞ்ச வேண்டிய நிலையில் இல்லை. அதிமுகவை நோக்கி தான் கட்சிகள் வரும். திமுக சார்பாக தேர்தல் அறிக்கைக்காக கனிமொழி தமிழகம் முழுவதும் பயணம் செய்கிறார். ஒரு நான்கு சுவருக்குள் இருந்து கொண்டு மனுக்களை பெற்று வருகிறார். அதிமுகவை போன்று ஆடிட்டோரியங்களில் மனுக்களை வாங்க தற்போது திமுகவும் செய்து வருகிறது.
மக்கள் எங்களுடன் மனு கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்களைத் தடுத்து வருகின்றனர். 17 வருடங்களாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக, இதுவரை என்ன தமிழகத்துக்கு செய்தது? அதிமுக மாநில உரிமைக்காக பாடுபட்டது கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது. திமுக எல்லை தாண்டி மீன்பிடித்தது தொடர்பாக குறைவான சம்பவங்களே அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. அதிமுகவை கண்ட இலங்கை அரசிற்கு பயம் அப்போது இருந்தது.
பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா கூறியதற்கு மக்களை பாதிக்கின்ற எந்த சட்டமாக இருந்தாலும் அதிமுக எதிர்க்கும். சிறுபான்மையின மக்கள் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டாலும் அதை அதிமுக எதிர்க்கும். பல்வேறு சட்ட திட்டங்களை கொண்டுள்ள இந்தியாவை பதில் சிவில் சட்டத்தை அனுமதிக்க முடியாது. அண்ணாமலை பொறுத்த மட்டில் பல கருத்துகளை கூறி மாட்டிக் கொண்டு வருகிறார். அவரின் கருத்துக்கள் வைரலாகி வருகிறது. அதிமுகவைப் பொறுத்த மட்டில் திமுகவும் பகையாளி, பாஜகவும் பகையாளி” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu