சூலூரில் விற்பனைக்காக கொண்டு வந்த 14 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

சூலூரில் விற்பனைக்காக கொண்டு வந்த 14 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
X

கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்களுடன் அவர்களை கைது செய்த போலீசார்.

1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று சூலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அந்தத் தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் முத்துகவுண்டன் புதூர் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் (45) மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் (45) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ கஞ்சா, இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்டம் ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!