சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது

சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
X

Coimbatore News- கைது செய்யப்பட்டவர்கள்.

Coimbatore News- சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

Coimbatore News, Coimbatore News Today- கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை குறைக்கும் வகையில் கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காங்கேயம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சூலூர் காவல் நிலைய காவல் துறையினர் காங்கேயம்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷம்சாத் (39) மற்றும் ஜெய் நாராயணன்மஹ்தோ (39) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இதேபோல செட்டிபாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் செட்டிபாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பத் என்கிற தம்பன் (48) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 1கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 63 நபர்கள் மீது 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து சுமார் 87.245 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!