நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் கொள்ளையர்கள்: பொதுமக்கள் அச்சம்

நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் கொள்ளையர்கள்: பொதுமக்கள் அச்சம்
X

 பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்களின் சிசிடிவி கேமராக் காட்சி.

முகமூடியுடன் கையுறை அணிந்து, கைகளில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் நோட்டமிட்டு சென்றுள்ளனர்.

கோவை மாவட்டம், சூலூர் அடுத்த காடாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட என்.எஸ்.கே அவென்யூ, நேரு நகர், கிருஷ்ணா கார்டன், பிரின்ஸ் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் முகமூடியுடன், கையுறை அணிந்து, கைகளில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 மர்ம நபர்கள் நோட்டமிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

மர்ம நபர்கள் முகத்தை மறைத்தபடி வீதிகளில் சுற்றித் திரியும் காட்சியை, அப்பகுதிவாசிகள் பேஸ்புக், வாட்ஸ்அப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

இந்த காட்சிகள் தற்போது வைரலாகி சுற்றுவட்டார கிராம மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காடம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்வதற்கு முன்பே பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil