கணவனை கொல்ல முயற்சி: மனைவி உட்பட 6 பேர் கைது

கணவனை கொல்ல முயற்சி: மனைவி உட்பட  6 பேர் கைது
X

செளந்தர்யா

கோவையில், கணவனை கொல்ல முயன்ற வழக்கில், மனைவி உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்த சேதுராஜராம் சிங் (29). சிங்காநல்லூரில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சௌந்தர்யா(26) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட சேதுராஜாராம் சிங், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, வீட்டின் முன் நின்று கொண்டிருந்த சேதுராஜாராம் சிங்கை, 6 பேர் கொண்ட கும்பல் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளது. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதால், படுகாயமடைந்த கணவர் சேது ராஜாராம் சிங்கை, மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டதாக சௌந்தர்யா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். தகவலறிந்து வந்த சிங்காநல்லூர் போலீசார் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் சௌந்தர்யாவுக்கு, அதே மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வரும் குணசேகரனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால் அடிக்கடி குணசேகரன் உடன் சௌந்தர்யா வெளியில் சென்று வந்துள்ளார். இவர்களின் கள்ளக்காதல், சேதுராமன் சிங்கிற்கு தெரிய வரவே, மனைவியை கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக, அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் தனது கணவன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கள்ளகாதலுனுடன் இணைந்து தீர்த்துக்கட்ட சௌந்தர்யா திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, கடந்த ஞாயிற்று கிழமை இரவு தனது கணவர் வெளியில் நின்று கொண்டிருப்பதாக கள்ளகாதலனுக்கு தகவல் அளிக்க, சம்பவ இடத்திற்கு வந்த குணசேகரன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலுடன் இணைந்து, சௌந்தர்யா, சேதுராஜராம் சிங்கை குத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். இதனையடுத்து மயக்கமடைந்த கணவனை மீட்ட சௌந்தர்யா, தனக்கு எதுவும் தெரியாதது போல நாடகமாடி மருத்துவனையில் சேர்த்துள்ளார்.

சேதுராஜராம் சிங் சிகிச்சைக்குப்பிறகு மயக்கம் தெளிந்தும் சம்பவம் குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்கவே, சௌந்தர்யாவின் நாடகம் அம்பலமானது. இதனையடுத்து சௌந்தர்யா, குணசேகரன், சௌந்தர்யாவின் 17 வயது சகோதரன் மற்றும் 3 சிறுவர்களை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!