தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து தீவிர விசாரணை : போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல்

தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து தீவிர விசாரணை : போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல்
X

Coimbatore News- போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் 

Coimbatore News- இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

Coimbatore News, Coimbatore News Today- தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில், விழிப்புணர்வு முகாம், நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலும், மாணவர்களுக்கான எதிர்வினைகளும் என்ற தலைப்பில், நடைபெற்ற இந்த முகாமில், தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சாரங்கன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும், இம்முகாமில், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் செந்தில் குமார், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்‌, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த முகாமிற்கு, பல்வேறு பள்ளிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சாரங்கன், அரசின் முயற்சியில் மாணவர்களை ஆன்லைன் மோகத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது உளவியல் விஷயங்களை எடுத்துரைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து முகாம்கள் நடத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும் அவர்களுடன் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடத்துவதாக தெரிவித்தார். மேலும் இந்த ஆன்லைன் சூதாட்டம் என்பது படிப்பிற்கும் விளையாட்டு மோகத்திற்கும் சம்பந்தமில்லை என தெரிவித்த அவர் சில ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட விளையாட விளையாட விளையாட விளையாட அதற்கு அடிமையாகிறார்கள் எனவும் சாதாரணமாக விளையாட துவங்கி இறுதியில் பணத்தை வைத்து விளையாடி பிறகு வேலை படிப்பு உள்ளிட்டவற்றில் நாட்டம் இல்லாமல் சென்று விடுவதாக தெரிவித்தார்.

மேலும் இது குறித்து ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும், இந்த ஆய்வறிக்கை மேலும் தங்கள் முயற்சிக்கு உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார். ஆன்லைன் விளையாட்டு வெப்சைடுகள் பலதும் விதிமுறை இன்றி செயல்படுவதாகவும் வெளிநாடுகளில் இருந்து அந்த வெப்சைடுகள் இங்கு பேட்ச் செய்யப்படுவதாக தெரிவித்தார். இது போன்ற வெப்சைடுகளை கண்டுபிடிக்க கண்டுபிடிக்க அதனை தடை செய்து வருவதாகவும் கூறினார். குழந்தைகள் விளையாடுகின்ற சில விளையாட்டுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பின்னர் பேட்டி அளித்த கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும் போக்குவரத்துக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் வாகன நிறத்த பகுதிகளை அதிகமாக கண்டறிந்து வாகனங்கள் நெரிசல் நிறைந்த பகுதிகளில் வராமல் இருப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் விடுமுறை நாட்களில் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாக கூறினார்.

தீபாவளி சம்பந்தமாக தற்பொழுது வரை எந்த ஒரு குற்ற சம்பவங்களும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார். பட்டாசு கடைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், லைசன்ஸ் இல்லாமல் ஆன்லைன் பட்டாசு விற்பனை செயல்படுவது தடை செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். போக்குவரத்து காவலர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு நாளைக்கு 350 காவலர்களும் அது தவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு காவலர்களும் பணியில் இருப்பதாக தெரிவித்தார். இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வரப்பெற்றதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஒரு சில குற்றவாளிகள் டார்க் ப்ரவுசர் மூலம் இதனை செய்து உள்ளதாக தெரிவித்தார்.

Tags

Next Story
why is ai important to the future