கோவையில் நடந்த நாய்கள் கண்காட்சி ; 200 க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு
Coimbatore News- நாய்கள் கண்காட்சி
Coimbatore News, Coimbatore News Today- கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் சார்பாக பீளமெரெடு பகுதியில் உள்ள இந்துஸ்தான் என்ற தனியார் கலை அறிவியல் கல்லுாரியில் நாய்கள் கண்காட்சி இன்று நடைபெற்றது.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த கண்காட்சியில், தமிழக நாட்டு இன நாய்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை இனங்கள் மற்றும் பிற இந்திய நாட்டு இனங்கள் மற்றும் வெளிநாட்டு வகை நாய்களான ஜெர்மன் செப்பர்ட், கிரேட் டேன், பாக்ஸர், புள் டாக், டால்மேசன், கிரெடவுன், உள்ளிட்ட வகைகள் என பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 200 க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன.
இந்த கண்காட்சியில் நாய்களின் வயது, உடல் அமைப்பு, கட்டளைக்கு கீழ்படிதல், நடை, ஓட்டம், தோற்றம், உயரம், எடை, ஓடும் வேகம், பராமரிப்பு ஆகியவற்றின் அடிப்படையாக கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும். அதில் அதிக மதிப்பெண் பெறும் சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதுகுறித்து கண்காட்சியை நடத்தும் மான்செஸ்டர் கேனல் கிளப் நிர்வாகிகள் தனுராய், மற்றும் சரவணக்குமார் ஆகியோர் கூறுகையில், நாய்கள் வளர்க்கும் ஆர்வத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையிலும், நாட்டு இன நாய்கள் வளா்ப்பை மேம்படுத்தும் விதமாகவும் இது போன்ற நாய்கள் கண்காட்சி நடைபெறுவதாகவும், இதில் பயிற்சி அளிக்கப்பட்ட நாய்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தனர். கோவையில் நடைபெற்ற நாய் கண்காட்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பல்வேறு வகையான நாய்கள் அணிவகுப்பு செய்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu