/* */

கோவை பிரபல மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள முத்தூஸ் மருத்துவமனையில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கோவை பிரபல மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
X

வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற மருத்துவமனை .

கோவை சிங்காநல்லூர் மற்றும் சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் டாக்டர் முத்தூஸ் என்ற பெயரில் தனியார் எலும்பு முறிவு சிகிச்சைக்கான மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கோவையில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் இந்த மருத்துவமனையும் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த மருத்துவமனைகளில் இன்று பிற்பகல் வருமான வரித்துறை அதிகாரிகள் ஐந்து பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முதலில் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு சிறிது நேரம் சோதனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கிருந்து கிளம்பி சரவணம்பட்டி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் அலுவலகத்தில் சோதனையிட்டனர்.

பிற்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை, ஒரு மணி நேரம் இந்த சோதனையானது நடைபெற்றுள்ளது. இந்த சோதனையின் போது சில ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், பின்னர் இங்கிருந்து கிளம்பி சென்றனர். இது குறித்து மருத்துவமனை தரப்பில் கேட்ட பொழுது பிற்பகல் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு வந்ததாகவும், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் சோதனை நடத்திய அவர்கள் ஒரு மணி நேரத்தில் கிளம்பி சென்று விட்டதாகவும் தெரிவித்தனர்.

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய பணம் மருத்துவமனையில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை சோதனை காரணமாக அப்பகுதிகளில் பரபரப்பு நிலவியது.

Updated On: 3 April 2024 1:57 PM GMT

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
 2. ஆரணி
  ஆரணி அறம் வளர் நாயகி கைலாசநாதர் கோயில் பிரமோற்சவம் தேர் திருவிழா
 3. லைஃப்ஸ்டைல்
  பூசணி விதைகளின் நன்மைகள் மற்றும் பயன்கள்
 4. லைஃப்ஸ்டைல்
  ஆமணக்கு எண்ணெய் தரும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
 5. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள்!
 6. ஈரோடு
  பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!
 7. இந்தியா
  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவையில்லை : திகார் சிறை அறிக்கை
 8. லைஃப்ஸ்டைல்
  தக்காளி, வெங்காயம் இல்லாத காரமான சட்னி செய்வது எப்படி?
 9. லைஃப்ஸ்டைல்
  உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு சாப்பிட வேண்டிய மீன்கள் என்னென்ன என்று...
 10. லைஃப்ஸ்டைல்
  "நம்பாதே யாரையும்" - மேற்கோள்களும் விளக்கமும்