கோவையில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

கோவையில் திமுக சார்பில் கோடைகால  தண்ணீர் பந்தல் திறப்பு
X
பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர்,தர்பூசணி, முலாம்பழம் பழங்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவைகளை வழங்கப்பட்டது

கோவை மாநகரில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் படியும, தமிழ்நாடு மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழிகாட்டுதலின் படியும் கோவை மாவட்டத்தில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.

அதன் படி, கோவை மாநகர மாவட்ட திமுக சார்பில் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ. எஸ். ஐ மருத்துவமனை அருகில்,கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர், முன்னாள் எம்எல்ஏ நா. கார்த்திக் தலைமையில், நீர்மோர் பந்தல் திறந்து வைத்தார்.

மேலும்,பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர்,தர்பூசணி, முலாம்பழம் பழங்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார். இதில் பீளமேடு 3வது பகுதிக் கழக செயலாளர் போனஸ் பாபு, தலைமை செயற்க்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், பொதுக்குழு உறுப்பினர்கள் மணிகண்டன், ஆடிட்டர் சசிகுமார், செல்வம் சிங்கை பகுதி செயலாளர் மீன் கடை சிவா, வட்ட கழக செயலாளர்கள் சிவகுமார், ஆனந்தகுமார்,நாராயணன், செந்தில்குமார், பார்த்திபன், பிரசாத், தண்டபாணி, மற்றும்கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், கழக உடன்பிறப்புக்கள் எனதிரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!