கியாஸ் கசிவால் தொழிலாளி உயிரிழப்பு ; போலீசார் விசாரணை

கியாஸ் கசிவால் தொழிலாளி உயிரிழப்பு ; போலீசார் விசாரணை

பீளமேடு காவல் நிலையம்

Gas Leakage Accident Police Enquiry குடிநீர் குழாயில் எப்படி கியாஸ் உருவானது, என்ன வகையான கியாஸ் என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Gas Leakage Accident Police Enquiry

சேலம் மாவட்டம் நெய்க்காரப் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். 45 வயதான இவர், குழாய்கள் அமைக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சரவணன் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்ய வந்திருந்தார். பீளமேடு தண்ணீர் பந்தல்- கவுதமபுரி சாலை அருகே உள்ள குடிநீர் குழாய் ஒன்றில் பழுது ஏற்பட்ட நிலையில், அதனைச் சரி செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது. இந்தப் பணியில் சரவணன் மற்றும் அஜய் ஆகியோர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த அஜய் என்பவர் மயக்கம் அடைந்தார். இதைப் பார்த்த சரவணன் அவரை காப்பாற்ற அங்கு சென்றார். அப்போது அவரும் கியாஸ் கசிவு நெடி தாங்க முடியாமல் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் அஜய் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பீளமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் குழாயில் எப்படி கியாஸ் உருவானது என்ன வகையான கியாஸ் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story