கருமத்தம்பட்டியில் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது

கருமத்தம்பட்டியில் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
X

ஹரிஹரன் 

கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கருமத்தம்பட்டி காவல் நிலைய காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கருமத்தம்பட்டி காவல் நிலைய காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் கருமத்தம்பட்டி காவல் நிலைய காவல் துறையினர் சென்னியாண்டவர் கோவில் அருகே சென்று சோதனை மேற்கண்டனர்.

அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முத்து மகன் ஹரிஹரன் (23) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நபரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.


Tags

Next Story
why is ai important to the future