ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாத நபர் மு.க. ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு

ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாத நபர் மு.க. ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு
X

அண்ணாமலை

முதல்வர் ஆசை எனக்கு இல்லை. அரசியலை நேர்மையாக செய்ய விரும்புகிறேன்.

கோவை ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நான் யாரையும் செய்தியாளர் சந்திப்பிற்கு வாருங்கள் என அழைக்கவில்லை. என்னிடம் வந்தால் கருத்து கிடைக்கும் என்பதால் வருகிறார்கள். கருத்து சொல்ல முடியாத ஈபிஎஸ், திராட்சை பழத்தை எடுக்க முடியாததால், அந்தப் பழம் புளிக்கும் எனச் சொல்கிறார். நான் சொல்வதை தான் மோடியும் சொல்கிறார். 33 மாத காலமாக திமுக ஆட்சி நடக்கிறது. அதனால் இரண்டு கட்சிகளுக்கு தான் போட்டி. ஈபிஎஸ் ரோடு ஷோ போனால் எவ்வளவு பேர் வருவார்கள்? அவரை பார்க்க யாரும் தயாராக இல்லை. அவர்கள் ரோடு ஷோ போனால் அவரை பார்க்க மக்கள் வரமாட்டார்கள். அதனால் மக்களை அழைத்து சென்று பட்டியில் அடைத்து வைத்து, எழுதி வைத்து படிப்பதை கேட்க வைக்கிறார்கள். பிரதமர் மக்களை பார்க்க வருகிறார். மக்கள் பிரதமரை பார்க்க வருகிறார்கள். இது ஜனநாயகமா? ரோடு ஷோவை மக்கள் தரிசன யாத்திரை என்று நாங்கள் சொல்கிறோம்.

டி.ஆர்.பி. ராஜாவின் அப்பா சமூக விரோதி. அவரின் அப்பாவே சாராயம் விற்று வருகிறார். நூற்றுக்கணக்கான நண்பர்களை குடிக்க வைத்து கொன்றவர்கள். பல பெண்களின் தாலி அறுத்தவர். எங்களை சமூக விரோதிகள் என்பது நகைச்சுவையின் உச்சம். கோபால புரத்தின் ஊழல் குடும்பம் 2024 தேர்தலுக்கு பின் சிறையில் இருப்பார்கள் என மோடி கேரண்டி கொடுப்பார். குடும்ப அரசியலை ஒழிப்பேன், பிரிவினை பேசுபவர்களை அடக்குவார் என மோடி கேரண்டி கொடுப்பார். ஸ்டாலின் கொடுக்கும் கேரண்டி உப்பு சப்பு இல்லாததது. சமூக வலைதளங்களில் சபரீசன் நிறுவனம் 7 கோடியே 33 இலட்சம் விளம்பரத்திற்கு செலவு செய்துள்ளது. பாஜகவின் மீது போலியான கட்டமைப்பு கடந்த 60 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கட்டமைத்து வைத்துள்ளனர். அந்த பிம்பங்கள் எல்லாம் தேர்தலுக்கு பிறகு உடையும்.

உதயநிதி ஒரு குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளார் தெரியுமா? ரோலக்ஸ் என்று வைத்துள்ளார். தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லை. திமுகவினர் மோசமான ஆட்கள். 2024 ஆண்டுக்கு பிறகு அதிகாரிகள் எத்தனை பேர் சிறைக்கு செல்கிறார்கள் என பாருங்கள். திமுக ஆட்சி நிரந்தரமாக இருக்க போவதில்லை. திமுகவிற்கு எதிராக நான் அரசியல் தைரியமாக செய்து வருகிறேன். என்னை பற்றி திமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நேற்று பதில் சொல்லியுள்ளார். ஊழல் யுனிவர்சிட்டி வேந்தராக பிரதமர் இருக்க வேண்டுமானால், அந்த ஊழல் யூனிவர்சிட்டியின் பெயரே ஸ்டாலின் யுனிவர்சிட்டி என வைக்க வேண்டும்.

முதல்வர் ஆசை எனக்கு இல்லை. அரசியலை நேர்மையாக செய்ய விரும்புகிறேன். ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாத நபர் மு.க. ஸ்டாலின். பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெறாது என்பது தான் எதிர்கட்சிகளின் விவாதம். தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற வேண்டும். கோவையில் பண அரசியல் என்ற பேயை மக்கள் ஒட்ட வேப்பிலை உடன் காத்திருக்கின்றனர். விஜய் ஆண்டனி சமூக பொறுப்புடன் பேச வேண்டும். அவர் மீது மரியைதை நான் வைத்துள்ளேன். ஒரே நாடு ஒரே தேர்தல் வர போகிறது. கருணாநிதியும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்றார். அதனால் மோடியை கருணாநிதி மேலே இருந்து வாழ்த்துவார்” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!