மருத்துவமனையில் திருட முயன்றவரை அடித்து கொலை செய்த 8 பேர் கைது

மருத்துவமனையில் திருட முயன்றவரை அடித்து கொலை செய்த 8 பேர் கைது
X

Coimbatore News கைது செய்யப்பட்டவர்கள்

Coimbatore News- கோவையில் தனியார் மருத்துவமனையில் திருட முயன்றவரை அடித்து கொலை செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் மணி என்கிற ராஜா. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்ற ராஜா, அங்கிருந்த இரும்பு கம்பிகளை திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் காவலாளிகள் உள்ளிட்டோர் கடுமையாக தாக்கியதில், ராஜா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ராஜாவின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக கொண்டு செல்லப்பட்டது. உடற்கூராய்வு முடிந்த பிறகு உடலை வாங்க மறுப்பு தெரிவித்த உறவினர்கள் அரசு மருத்துவமை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல் துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் ராஜா உயிரிழந்தது குறித்தான தகவல்கள் முழுமையாக இல்லை எனவும், அவரை தாக்கிய நபர்களின் பெயர்களும் இடம்பெறவில்லை எனவும், உடலில் உள்ள காயங்கள் பற்றியும் எந்த தகவல்களும் இல்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், பின்னர் கொலை உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு எட்டு பேரை கைது செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் ராஜாவின் உடலை உறவினர்கள் பெற்று சென்றனர். ஐந்து பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக கொலை வெறி தாக்குதல், காயங்கள் ஏற்படுத்தும் அளவிற்கு தாக்குதல், உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக மருத்துவமனை தரப்பை சேர்ந்த 15 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்திய நிலையில், மருத்துவமனை துணை தலைவர் நாராயணன், தகவல் பிரிவு மேலாளர் ரமேஷ், செயலாக்க துறை அதிகாரி சரவணகுமார், பிஆர்ஓ சசிக்குமார், பிளம்பர் சுரேஷ், சரவணகுமார், செக்யூரிட்டி மணிகண்டன், ஸ்டோர் மேனேஜர் சதீஷ்குமார் ஆகிய எட்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!