அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட 14 ஆயிரம் வெளிநாட்டு ரக சிகரெட்டுகள் பறிமுதல்

அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட 14 ஆயிரம் வெளிநாட்டு ரக சிகரெட்டுகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்கள்

அபுதாபியில் இருந்து கோவை வரும் விமானத்தில் சிகரெட் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது.

கோவை பீளமேடு பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து டெல்லி உள்ளிட்ட உள்நாட்டு பகுதிகளுக்கும், அபுதாபி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருட்கள் உள்ளிட்டவை கடத்தி வரப்படுவதை தடுக்க பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அபுதாபியில் இருந்து கோவை வரும் விமானத்தில் சிகரெட் கடத்தி வரப்படுவதாக கோவை விமான நிலைய நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அபுதாபியில் இருந்து கோவைக்கு வந்த இண்டிகோ விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணியின் பெட்டியில் அதிக அளவில் வெளிநாட்டு சிகரெட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து மொத்தம் 14 ஆயிரம் சிகரெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனன். தொடர்ந்து அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்களின் மதிப்பு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அந்த பயணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story