பொள்ளாச்சியில் பக்கத்து வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் வாலிபர் உயிரிழப்பு..!

பொள்ளாச்சியில் பக்கத்து வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் வாலிபர் உயிரிழப்பு..!
X

ஹரிஹரசுதன்

சத்தம் கேட்டு அன்பழகன் மற்றும் அருகில் இருந்தவர்கள் பார்த்த போது, சுவர் இடிந்து ஹரிஹரசுதன் உயிரிழந்தது தெரியவந்தது.

கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை, அவ்வப்போது பெய்து வருகிறது. தொடர்ந்து மிதமான மழை பெய்து வருவதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் அண்ணா தெருவில் அன்பழகன் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.

இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். 21 வயதான இவரது மகன் ஹரிஹரசுதன் தனியார் கம்பெனியில் பணி புரிந்து வருகிறார். நேற்று இரவு ஹரிஹரசுதன் தனது வீட்டின் மறு அறையில் தனது ஆசை நாய்க்குட்டியுடன் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில், அருகில் இருந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஹரிஹரசுதன் மற்றும் அவரது ஆசை நாய்க்குட்டியும் உயிரிழந்தது. இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அன்பழகன் மற்றும் அருகில் இருந்தவர்கள் பார்த்த போது, சுவர் இடிந்து ஹரிஹரசுதன் உயிரிழந்தது தெரியவந்தது.

இதை அடுத்து ஹரிஹரசுதன் உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது மேலும் சம்பவம் குறித்து கோமங்கலம் காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுவர் இடிந்து ஹரிஹரசுதன் இறந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!