இருசக்கர வாகனம் மோதி நீதிபதி உயிரிழந்த வழக்கில் ஒர்க்ஷாப் தொழிலாளி கைது
கைது செய்யப்பட்ட வாஞ்சிமுத்து
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. 58 வயதான இவர், நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வந்தார், இந்நிலையில் இவர் நேற்று வீட்டிலிருந்து பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலை சாலை ஓரத்தில் உள்ள மளிகை கடைக்கு தனது காரில் வந்து இறங்கி சாலையை கடந்துள்ளார். அப்போது உடுமலை சாலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த இருசக்கர வாகனம் நீதிபதி கருணாநிதி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த நீதிபதி கருணாநிதியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நீதிபதி கருணாநிதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அறிந்து வந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நீதிபதி மீது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ந்த விசாரனையில் விபத்தை ஏற்படுத்திய நபர் நாகூர் பகுதியை சேர்ந்த வாஞ்சிமுத்து என்பதும், அவர் ஒர்க்ஷாப் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து நாகூர் பகுதியில் பதுங்கி இருந்த வாஞ்சிமுத்துவை பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu